Home இலங்கை சமூகம் வீடொன்றில் தீ விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

வீடொன்றில் தீ விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு

0

சிலாபம் (Chilaw) – சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (19) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது பிள்ளை உயிரிழந்துள்ளதாக சிலாபம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவர்களது சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை

உயிரிழந்தவர்களில் 42 வயதுடைய ஆண், 40 வயதுடைய பெண் மற்றும் 15 வயது சிறுமி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிலாபம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-house-fire-three-deaths-from-the-same-family-1729397846

NO COMMENTS

Exit mobile version