Home இலங்கை சமூகம் சீரற்ற காலநிலையால் யாழில் வீடொன்று பகுதியளவு சேதம்

சீரற்ற காலநிலையால் யாழில் வீடொன்று பகுதியளவு சேதம்

0

அதிக மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள வீடு ஒன்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்ட நிலையில் வெள்ள நீரும் வீட்டுக்குள் புகுந்துள்ளது.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு ஜே/162 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றே இவ்வாறு சேதமடைந்துள்ளது. 

இடம்பெயர்வு 

இதன் காரணமாக, அந்த வீட்டிலுள்ள குடும்பத்தை
சேர்ந்த இருவர் பாதிப்படைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வீட்டில் வசித்த நபர்கள் வேறு
இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/a-house-roof-been-damaged-by-heavy-rain-jaffna-1729286863

NO COMMENTS

Exit mobile version