Home இலங்கை சமூகம் யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

0

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள
தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் இன்று சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

18 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது அனைவரும் கயிறு கட்டி நீராடியுள்ளனர். அதன் பின்னர்
அனைவரும் வெளியேறிய நிலையில் ஒரு இளைஞன் மாத்திரம் தொடர்ந்து நீராடியுள்ளார்.

அவரை வருமாறு ஏனையவர்கள் அழைத்துள்ளனர். குறித்த சிறுவன் சிறிது நேரத்திற்கு பிறகு வருவதாக கூறியுள்ளார். 

 

மரண விசாரணை

நீண்ட நேரமாகியும் குறித்த சிறுவனை காணாததால் ஏனையவர்கள் மீண்டும் அங்கு
சென்று பார்த்த போது கயிறு அறுந்த நிலையில் அங்கு சிறுவனை காணவில்லை.

ஏனையோரின் உதவியுடன் தோட்ட கிணற்றில் தேடியபோது சிறுவன் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் தொடர்பான மரண விசாரணையை கரவெட்டி தீடீர் மரண விசாரணை அதிகாரி
வே.பாஸ்கரன் மேற்கொண்டுள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version