முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கு – கிழக்கில் பாரிய போராட்டம்: விடுக்கப்பட்ட அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினமான ஆகஸ் 30 ஆம் திகதி
வடக்கில் யாழ்ப்பாணத்திலும் ,கிழக்கில் திருகோணமலையிலும் நீதி வேண்டி பாரிய
போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்

எதிர்வரும் ஒகஸ்ட் 30 சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கு - கிழக்கில் பாரிய போராட்டம்: விடுக்கப்பட்ட அழைப்பு | A Massive Struggle In The North For The Missing

கடந்த 15
ஆண்டுகளாக இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீடுவீடாக
சென்று இழுத்து செல்லப்பட்ட உறவுகள், தாமாக சரணடைந்த உறவுகளை
தேடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் வடக்கு – கிழக்கில் பல பிரதேசங்களில்
போராடிக்கொண்டிருக்கின்றோம்.

எமது உறவுகளுக்கான நீதி எமக்கு கிடைக்வேண்டும்
என்று இரவு பகலாக போரடி வருகின்றோம்.

இந்த நாட்டில் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவரைக்கும் கிடைக்கப்பெறவில்லை
ஆனால் நாங்கள் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் பல
ஆணைக்குழுக்களை அமைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.” என ஆதங்கம் வெளியிட்டிருந்தார்.

மன்னார்

மேலும், நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் இருந்து போராடி
வருகின்றோம்.எனினும் எங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ன்னார் மாவட்ட வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல்
உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை(27) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்
கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இலங்கை
அரசாங்கத்திடம் இருந்தும் சரி சர்வதேச அரசாங்கத்திடம் இருந்தும் சரி எவ்வித
சமிஞ்ஞைகளும் கிடைக்கவில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக வடக்கு - கிழக்கில் பாரிய போராட்டம்: விடுக்கப்பட்ட அழைப்பு | A Massive Struggle In The North For The Missing

இந்த நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்
ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் தொடர்ந்தும் ஒற்றுமையாக சர்வதேசத்திடம்
குரல் எழுப்பி வருகிறோம்.

எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை ஆரியகுள
சந்தியில் முனியப்பர் கோவில் வளாகம் வரையும், எமது போராட்டம் மற்றும் ஊர்வலம்
இடம் பெறும்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு எமது உறவுகளை மீட்க குரல்
கொடுப்போம்.” என்றார்.

செய்தி – ஆசிக்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.