Home உலகம் உயிர்கள் வாழ புதிய கோளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உயிர்கள் வாழ புதிய கோளை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

0

சூரிய மண்டலத்துக்கு அருகில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த கோள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரம்மாண்ட வாயு கோள் 

வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் நிலவுகளைக் கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கோள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த கோள் தொடர்பில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருவதாக அறியமுடிகிறது.

சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version