Home இலங்கை சமூகம் ஏ.ஆர். ரஹ்மானின் உடல்நிலை..! வெளியான தகவல்

ஏ.ஆர். ரஹ்மானின் உடல்நிலை..! வெளியான தகவல்

0

புதிய இணைப்பு

இந்திய இசைக்கலைஞர், ஏ. ஆர். ரஹ்மான், வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார். 

இன்று காலை அப்பலோ மருத்துவமனைகளுக்கு நீரிழப்பு அறிகுறிகளுடன் அவர் சென்றுள்ளார். 

அது தொடர்பான வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், அவர் வீடு திரும்பியதாக அப்பலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

முதலாம் இணைப்பு 

இந்திய இசைக்கலைஞரான ஏ.ஆர். ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சு வலி காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

58 வயதான இவர், இன்று (16.03.2025) காலை 7:30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

அவசர சிகிச்சை பிரிவு… 

இந்தியாவின் சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரஹ்மான் தற்போது மருத்துவக் குழுவின் நெருக்கமான கண்காணிப்பில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ரஹ்மானுக்கு ஈசிஜி மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மேலும், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version