முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரியவாய்ப்பு : முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..!

ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி வரை பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு சென்றவர்களிடமிருந்து 152 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பணிப்பாளர் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார்.

தற்போது பின்னவல யானைகள் சரணாலயத்தை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு யானைகளை குளிப்பாட்டுவதற்கும் அவை வாழும் தொழுவத்தை சுத்தம் செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதுடன் உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யானைகளை குளிப்பாட்டவும் தொழுவத்தை சுத்தம் செய்யவும்

யானைகள் தங்கும் இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள பார்வையாளர்களுக்கு பெறுமதியான சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரியவாய்ப்பு : முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..! | A Rare Opportunity For Sri Lankan Tourists

இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிருகக்காட்சி சாலை டிக்கெட்டுகளை பெறுவதற்கான வசதிகளை அடுத்த சில வாரங்களில் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கனடாவில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

கனடாவில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம் : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

பயணச்சீட்டு வழங்கும் நிலையங்களில் அட்டை கொடுப்பனவுகள் வசதியாக செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட செயல் பணிப்பாளர், யானைகள் குறித்து படிப்பவர்களுக்கு படிக்கும் வசதிகளும் உள்ளதாகத் தெரிவித்தார்.

முதலிடத்தில் ரஷ்யா

ஜனவரி 1 முதல் பெப்ரவரி 8 வரை 268,375 சுற்றுலாப் பயணிகள் பின்னவலவிற்கு வருகை தந்துள்ளதாக அவர் கூறினார்.

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கு அரியவாய்ப்பு : முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா..! | A Rare Opportunity For Sri Lankan Tourists

ரஷ்யாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பெப்ரவரியில் இந்த நாட்டிற்கு வந்தனர், மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையில் 15% ஆகும்.

14% இந்திய சுற்றுலாப் பயணிகளும், 9% இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதவான்

காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நீதவான்

இலங்கையின் சுற்றுலாத் துறை இந்த ஆண்டு 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது, இதன் மூலம் 4 பில்லியன் டொலர் வருவாய் ஈட்ட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்