Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் ஆற்று நீரில் கலந்துள்ள இரசாயன நுரை

நுவரெலியாவில் ஆற்று நீரில் கலந்துள்ள இரசாயன நுரை

0

நுவரெலியாவில் ஆற்றில் அதிக நுரை பொங்கி வருவதால் அப்பகுதி மக்கள்
அச்சமடைந்துள்ளனர்.

நுவரெலியா மீபிலிமான பகுதியில் இருந்து நானுஓயா வழியாக செல்லும் ஆற்றில் தொடர்
மழை காரணமாக ருவான் எலியா, பிளாக்பூல் போன்ற பகுதிகளில் ஆற்றில் தேங்கியுள்ள
நீரிலும் கரையோரங்களிலும் அத்துடன் ஆற்றில் இருந்து வெளியேறும் நீரிலும்
அதிக இரசாயன நுரைகளுடன் தேங்கியுள்ளன.

அதிக துர்நாற்றம்

குறித்த இரசாயன நுரைகளுடன் அதிக
துர்நாற்றம் வீசுவதால் இப்பகுதி விவசாயிகளும் பொது மக்களும் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.

நுவரெலியாவில் தொடர்ந்து பெய்யும் மழையுடன் காற்று பலமாக வீசியதால்
ஆற்றுத்தண்ணீர் மீது படர்ந்திருந்த நுரை ஆங்காங்கே பறந்து செல்கிறது.

இதனால்
குறித்த ஆற்று நீர் மாசுபட்டு அதிக நூரையுடன் வெளியேறுவதாக நினைத்து சுவாச
பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version