முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலம் தாண்டிய காதல்: ஆச்சரியப்படுத்திய திருமணம்!

காதலுக்கு காலமும் வயதும் ஒரு தடையில்லை என நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் நடந்த திருமணம் ஒன்று ஆச்சியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காதல் திருமணம் ஆந்திராவில் உள்ள முதியோர் காப்பகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, 64 வயதுடைய மணமகனும் 68 வயதுடைய மணமகளுக்குமே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

காதல் திருமணம்

ஆந்திராவின் ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா முதியோர் இல்லம் செயல்படுகிறது. இங்கு சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். 

அதில் நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி (64) என்பவர் 2 ஆண்டுகளாக இந்த முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துள்ளது.

இதேவேளை, அதே முதியோர் இல்லத்தில் வசிக்கும் கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த ராமலட்சுமி(68), மூர்த்திக்கு உதவிகளை செய்துவந்துள்ளார். 

காலம் தாண்டிய காதல்: ஆச்சரியப்படுத்திய திருமணம்! | A Surprising Love Marriage

குறிப்பாக அவர் சாப்பிடவும், நடக்கவும் உதவி செய்ததுடன் மருத்துவர்கள் எழுதி கொடுத்த மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்து அவர் குணமடைய பலமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்து திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்துள்ளனர். 

இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியிடம் அவர்கள் தெரிவித்ததையடுத்து இருவருக்கும் நெருங்கிய சொந்தபந்தம் இல்லை என்பதால், முதியோர் இல்லத்திலேயே கடந்த வெள்ளிக்கிழமை மூர்த்தி மற்றும் ராமலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

புதுமண தம்பதி

இந்த திருமணம் தொடர்பில் புதுமண தம்பதி கூறும்போது, “வயதானவர்களுக்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும். இதை நாங்கள் உணர்ந்தோம்.

காலம் தாண்டிய காதல்: ஆச்சரியப்படுத்திய திருமணம்! | A Surprising Love Marriage

முதிர்வயதை ஒரு தடையாக நாங்கள் நினைக்கவில்லை. மனம் ஒத்துப் போனது, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம்.

திருமணம் செய்து கொண்டோம். எங்களின் இறுதி நாட்கள் வரை பிரியாமல் வாழ்வோம்” என்று தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.