கிளிநொச்சி (Kilinochchi) காவல்துறை பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இடம்பெற்ற
விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (31) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி நோக்கி மோட்டார்
சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரை பின்னால் வந்த டிப்பர்
முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது
அத்துடன் விபத்து இடம்பெற்ற இடத்தில் விபத்தை ஏற்படுத்திய சாரதி பொதுமக்களால்
தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனால் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சற்று முறுகல் நிலை
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
