முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் இளைஞன் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

வவுனியா – கோவில்குளம் பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளரினால் இளைஞன் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று(13.02.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே காயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணை

வவுனியா, சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியா, முதலாம்
குறுக்குத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார்.

வவுனியாவில் இளைஞன் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் | A Youth Was Stabbed In Vavuniya

சம்பவ தினத்திற்கு முதல் நாள்(12) இரவு  வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கோவில்குளம் பகுதியில் உள்ள
வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும், அங்கு
பணியாற்றுபவருக்கும் இடையில் இன்று (13.02.2024) காலை ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து
வர்த்தக நிலைய உரிமையாளர் தன் மீது கத்தியால் பல இடங்களில் குத்தியதாக
பாதிக்கப்பட்டவர் வவுனியா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இளைஞன் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் | A Youth Was Stabbed In Vavuniya

இதற்கமைய சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா

இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா

புதிய மின்சார இணைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்

புதிய மின்சார இணைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை எடுத்துள்ள புதிய தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்