Home சினிமா எனக்கு 125 கோடி வேண்டாம்.. 100 ரூபாய் போதும்: கூலி படத்தில் நடித்த அமீர் கான்...

எனக்கு 125 கோடி வேண்டாம்.. 100 ரூபாய் போதும்: கூலி படத்தில் நடித்த அமீர் கான் அதிரடி

0

நடிகர் அமீர் கான் ஹிந்தியில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் தற்போது கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.

அமீர் கான் நடிப்பில் கடந்த மாதம் Sitaare Zameen Par என்ற படம் ரிலீஸ் ஆகி இருந்தது. 200 கோடிக்கும் மேலாக இந்த படம் தியேட்டர்களில் வசூலித்து இருந்தது.

மேலும் ஓடிடியில் எப்போது படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்க, தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்போவதில்லை என அமீர் கான் அறிவித்துவிட்டார்.

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ

125 கோடி வேண்டாம்.. 100 ரூபாய் போதும்

Sitaare Zameen Par படத்தை நேரடியாக யூடியூபில் அமீர் கான் ரிலீஸ் செய்கிறார். அமீர் கானின் Aamir Khan Talkies யூடியூப் சேனலில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 100 ரூபாய் செலுத்தி இந்த படத்தை ரசிகர்கள் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஓடிடி தளங்கள் 125 கோடி ரூபாய் வரை தர முன்வந்தாலும் தனக்கு அது வேண்டாம் என சொல்லி youtubeல் payperview முறையில் அமீர் கான் படத்தை ரிலீஸ் செய்கிறார்.

“எனக்கு 125 கோடி எல்லாம் வேண்டாம், 100 ரூபாய் போதும்” என அமீர் கான் இது பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.
 

NO COMMENTS

Exit mobile version