ஆண்பாவம் பொல்லாதது
ஜோ படத்தின் வெற்றி கூட்டணியான ரியோ ராஜ்-மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் ஆண்பாவம் பொல்லாதது.
கடந்த அக்டோபர் 31ம் தேதி வெளியான இந்த படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த பாசிட்டீவ் விமர்சனங்கள் காரணமாக தற்போது பெரிய திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளுடன் படம் திரையிடப்பட்டு வருகிறது.
படக்குழுவினரும் எல்லா திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறார்கள். டிக்கெட் புக்கிங் தளங்களில் ஆண்பாவம் பொல்லாதது தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்… எவ்வளவு தெரியுமா?
வசூல்
படத்தின் கதை தரமாக அமைய ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ரிலீஸ் ஆன முதல் 3 நாட்களிலேயே இப்படம் தமிழ்நாட்டில் ரூ. 5 கோடி வரை வசூல் செய்தது. தற்போது இப்படம் 5 நாள் முடிவில் ரூ. 6 கோடி வரை வசூல் வேட்டை செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது.
