முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் பாரிய விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடம் பகுதியில் ஏற்பட்ட பாரிய வாகன விபத்தினால் சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது, இன்று(02) இடம்பெற்றுள்ளது.

சுற்றுலாப்பிரயாணிகளை ஏற்றிச்செல்லும் கெப் ரக வாகனமொன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியருயிலிருந்த மின்கம்பத்தில் மோதுண்டத்தில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு! காவல்துறையினர் விசாரணை

யாழில் திடீரென பற்றி எரிந்த வீடு! காவல்துறையினர் விசாரணை

காரணம் 

இதன்போது இவ்வாகனத்தின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதாகவும் அவர் காயங்களுக்குள்ளான நிலையில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் பாரிய விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி | Accident In Batticaloa

அத்தோடு, சாரதியின் நித்திரை கண்கலக்கமே இச் சம்பவத்துக்கு காரணமாகலாம் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

விபத்தினால் அருகிலிருந்த இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான 4 பாரிய மின்கம்பங்கள் உடைந்து முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், உரிய கெப் ரக வாகனமம் பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பில் பாரிய விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி | Accident In Batticaloa

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கச்சத்தீவை கேட்டு இந்தியா இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை : ஜீவன் தொண்டமான் விளக்கம்

கச்சத்தீவை கேட்டு இந்தியா இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை : ஜீவன் தொண்டமான் விளக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்