Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிளிநொச்சியில் விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி.. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

பரந்தன் நகர் பகுதியில் விபத்தில் உயிரிழந்த இளம் பெண்ணுக்கு நீதி கோரியும் அவரது ஆத்ம
சாந்திக்காகவும் விபத்து நடந்த இடத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 விழிப்புணர்வு பதாகை

நேற்றைய தினம் (06.08.2025) இரவு 7 மணியளவில் டிப்பர் ரக வாகன
விபத்தில் உயிரிழந்த சந்திரசேகரம் யதுகிரி என்பவருக்கு ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, பிரார்த்தனையும் வாகன சாரதிகள் பாதுகாப்பாக வாகனங்களை வீதி
விதிப்படி செலுத்தி வீதி விபத்துக்களை குறைக்கவும் வேண்டி விபத்து நடைபெற்ற
இடத்தில் விழிப்புணர்வு பதாகை காட்சிப்படுத்தப்பட்டது. 

கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் நகர் பகுதியில் கடந்த மாதம் 31ஆம் திகதி டிப்பர் ரக வாகன விபத்தில் சந்திரசேகரம் யதுகிரி என்பவர் உயிரிழந்தார்.

NO COMMENTS

Exit mobile version