Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்

முல்லைத்தீவில் கோர விபத்து : ஒருவர் படுகாயம்

0

முல்லைத்தீவில் (Mullaitivu) மாங்குளம் ஏ9 வீதியில் டிப்பர் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (28) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நபர் 

இதையடுத்து, படுகாயமடைந்த நபர் கிளிநொச்சி (Kilinochchi) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலமதிக சிகிச்சைக்காக யாழ் (Jaffna) போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/accident-in-mullaitivu-today-1719564881

NO COMMENTS

Exit mobile version