Home இலங்கை சமூகம் அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் பலி

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (24) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  மத்தலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

லொறியின் சாரதி

அத்தோடு, விபத்தில் பின்னால் சென்ற லொறியின் சாரதி, சாரதி உதவியாளர் மற்றும் முன்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் ஆகியோர் காயமடைந்துள்ளதுடன் பின்னால் சென்ற லொறியின் சாரதி உதவியாளர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தெற்கு அதிவேக வீதியின் அங்குனுகொலபலஸ்ஸ சோதனைச் சாவடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17

Source: https://ibctamil.com/article/accident-on-expressway-1721792754

NO COMMENTS

Exit mobile version