முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடு: பாராட்டும் வடபுல சமூக ஆர்வலர்கள்


Courtesy: uky(ஊகி)

திருகோணமலை(Trincomalee) – பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பில் வடபுல சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அது போல் ஏன் வடக்கிலங்கையிலும் செயற்படுத்த முடியவில்லை? என கேள்வியொன்றையும் எழும்புவதும் இங்கு நோக்கத்தக்கது.

வடக்கின் பல இடங்களிலும் வீதிகளின் ஓரங்களில் குப்பைகளால் அவை அழகிழந்து கிடக்கின்ற போதும் அவற்றை தடுப்பதற்காக எத்தகைய நடவடிக்கைகளையும் கடுமையாக்க வில்லை என அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

வீதிகளில் குப்பைகளை போடுவதை தடுப்பதற்கும் ஈழநிலத்தின் வீதிகளை அழகாக வைத்திருப்பதற்கும் பொருத்தமான நீண்டகால திட்டமிடல்கள் எவையும் அவற்றை நிர்வகிக்கும் தற்போதைய நிர்வாக அலகுகளிடம் இல்லை என சமூக விடய ஆய்வாளர் வரதன் இது தொடர்பில் தனது கருத்தினையும் பதிவு செய்திருந்தார்.

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்கா?... திடுக்கிடவைக்கும் தகவல்கள்!!

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் பின்னணியில் அமெரிக்கா?… திடுக்கிடவைக்கும் தகவல்கள்!!

பாடசாலையிலிருந்து மாணவர்கள் தாம் வாழும் சூழல்களின் அழகும் தூய்மையும் தொடர்பில் தெளிவான பழக்கவழக்கங்களை கற்றிருக்க வேண்டும். எனினும் அது அவர்களுக்கு கிடைக்காமை தாயக வாழ் ஈழத் தமிழர்களின் துர்ப்பாக்கியம்.

பட்டணமும் சூழலும் பிரதேச சபை

A15 வீதியின் வழியே மட்டக்களப்பு நோக்கிய பயணத்தில் 126 வது கிலோமீற்றர் வீச்சில் அமைந்துள்ள ஐந்தாவது பாலத்திற்கு அண்மையில் இங்கு காட்டப்பட்டுள்ள அறிவித்தல் பலகையினை அவதானிக்க முடிகின்றது.

பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடு: பாராட்டும் வடபுல சமூக ஆர்வலர்கள் | Activities Of Trincomalee Pradeshiya Sabha

அந்த சூழல் காடுகளையும் வீதியையும் கொண்டுள்ளதோடு அருகில் பயனுள்ள நிறுவனங்களும் இருப்பதாக அறிய முடிகின்றது.

இந்த வீதியின் வழியே பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளும் தம் அன்றாட பயணத்தின் போது அவ் வீதியை பயன்படுத்தும் உள்ளூர் மக்களும் வீதியில் குப்பைகளை போட்டுச் செல்லும் இயல்பு தொடர்பில் இந்த அறிவித்தலை பிரதேச சபை வைத்துள்ளதாக திருகோணமலை வாழ் சமூக சேவையார்களிடம் கேட்ட போது அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த அறிவித்தலில்” இப்பிரதேசங்களில் குப்பை போடுதல் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது, இவ்வறிவித்தலை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும்.” என மும்மொழிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடு: பாராட்டும் வடபுல சமூக ஆர்வலர்கள் | Activities Of Trincomalee Pradeshiya Sabha

இது போலான அறிவித்தல்கள் வடபுலத்தின் அதிகமான இடங்களில் அவசியமாக இருப்பதாக வடபுல சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் அறிவித்தல் வைத்தது போல அதில் சொல்லப்பட்டுள்ளது போல் பிரதேச சபைகள் சட்டத்தினை நடைமுறைப்படுத்தினால் சந்தோசம் தான் என வடபகுதி மக்கள் பலரிடம் கருத்துக்களை பெற முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தங்கள் பகுதிகளில் நித்தம் நடந்தேறும் வீதிகளில் குப்பைகள் வீசியெறிந்து விட்டுப் பயணிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு குறைந்தளவிலேனும் இது தொடர்பான அறிவித்தல் பலகைகளை காட்சிப்படுத்தல் உதவும் என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விவகாரம்: மைத்திரி அளித்துள்ள விளக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விவகாரம்: மைத்திரி அளித்துள்ள விளக்கம்

வீதிகள் ஏன் அழகாக இருக்க வேண்டும்?

நகரமொன்றின் வீதிகள் தூய்மையோடு அழகாக இருக்கும் போது அந்த நகரம்
அழகானதாக நோக்கப்படுகிறது.

வீட்டுக்கு வீடு வாசல்படி போல் வீதிகளோடு இணைந்த வீடுகளாகவே எல்லா இடமும் இருக்கிற போது வீதிகளின் தூய்மை அந்த ஊர்களுக்கு வரும் மக்களின் மனங்களிலும் ஊரில் வாழும் மக்களின் மனங்களிலும் நல்ல சிந்தனைகளை அவை தூண்டி விடும்.

பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடு: பாராட்டும் வடபுல சமூக ஆர்வலர்கள் | Activities Of Trincomalee Pradeshiya Sabha

வீட்டு வளவும் வீடும் வீதி போல் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பேசும் நாளொன்று வந்தால் அதனை நல்ல மாற்றமாக எண்ணிப் பார்க்கலாம்.

இன்று வீடு போல் வீதியும் தூய்மையாக இருக்க வேண்டும் என சொல்ல முடியாத சூழல்கள் இருப்பதும் உண்மையே! என ஊரும் தூய்மையும் தொடர்பில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளை சுட்டிக்காட்டி முதியவர்கள் சிலரிடம் கருத்துக்களை கேட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தனர்.

இந்திய இராணுவத்தின் தலையீட்டினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள்: அனுர விசனம்

இந்திய இராணுவத்தின் தலையீட்டினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள்: அனுர விசனம்

வடக்கிலும் வருமா அறிவித்தல் 

வடக்கிலுள்ள வீதிகளில் குப்பைகள் போடுவதை தடுப்பதற்காக திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடு போல் அறிவித்தல் பலகைகளை நிறுவி சட்ட நடவடிக்கைகளை எடுக்க முற்பட்டால் பெரியளவிலான மாற்றங்கள் ஏற்படும்.

எனினும் அது சாத்தியப்பாடானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுகின்றது. திருகோணமலை கிழக்கு மாகாணமான போதும் இலங்கை அரசாங்கத்தின் நிர்வாகத்தில் உள்ள ஒரு இடம் என்பதும் நோக்கத்தக்கது.

பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் செயற்பாடு: பாராட்டும் வடபுல சமூக ஆர்வலர்கள் | Activities Of Trincomalee Pradeshiya Sabha

இலங்கையின் கிழக்கிலும் பல இடங்களில் வீதிகளில் வீசப்படும் குப்பைகளின் அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வடக்கின் ஊர் வீதிகளிலும் காட்டுகளை  இரு பக்கங்களிலும் கொண்ட வீதிகளிலும் வீதியின் ஓரமாக அதிகளவான குப்பைகளை அவதானிக்க முடிகின்றது.

எல்லா இடங்களிலும் பிரதேச சபைகள் உள்ள போதும் ஒரு இடத்தில் கவனமெடுக்கப்படும் குறித்த ஒரு மக்கள் நலன் சார்ந்த விடயம் ஏன் ஏனைய இடங்களில் கவனம் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது.

வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களிலும் கவனமெடுத்துக் கொள்ள வேண்டிய வீதிகளின் தூய்மையும் வீதியோர காடுகளில் சேரும் குப்பைகளை தடுப்பதும் பொதுமக்கள் பொது இடங்களில் போடும் குப்பைகளை உரிய முறையில் இடுவதற்கும் பின்னர் அவற்றை உரிய முறையில் அகற்றுவதற்கும் கூடிய கவனம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

வடக்கு வீதிகளில் பயணிக்கும் போது தோன்றிய வீதிகளில் போடப்பட்டிருந்த குப்பைகள் தொடர்பான தூண்டல் கிழக்கில் பயணிக்கும் போது ஏற்படவில்லை.அதற்கு எதிராக இருந்ததாக அண்மையில் கிழக்கு நோக்கிய தன் பயண அனுபவம் தொடர்பில் எழுத்தாளர் நதுநசி குறிப்பிட்டதும் இங்கே நோக்கத்தக்கது.

வடக்கில் ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நாட்டின் ஏனைய பகுதிகளின் செயற்பாடுகள் சுட்டிக்காட்டுவதை வடக்கு மக்கள் கவனிக்கத் தவறுவது கவலையளிப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்