Home சினிமா கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?… செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?… செம ஸ்டைலிஷ் போட்டோஸ்

0

கஜினி படம்

ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்பயணத்தில் நிறைய வெற்றிப் படங்கள் உள்ளது, அதில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட படம் தான் கஜினி.

சூர்யா-அசின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

தமிழில் மிகப்பெரிய வெற்றியடைய இப்படத்தை முருகதாஸ் ஹிந்தியில் அமீர்கானை வைத்து இயக்கினார், அங்கும் படத்திற்கு நல்ல வரவேற்பு, செம வசூல் வேட்டை நடத்தியது.

போட்டோ ஷுட்

கஜினி படம் ஆரம்பித்த போது முதலில் இப்படத்தில் நடித்தது சூர்யா இல்லை, நடிகர் அஜித் தான்.

தீனா படத்திற்கு பின்னர் முருகதாஸ்-அஜித் கூட்டணியில் இப்படம் தயாரானது. நடிக்க ஒப்புக்கொண்டு 2 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித் அதன்பின் படத்தில் இருந்து மொத்தமாக விலக சூர்யா நடித்தார்.

இதுகுறித்து அண்மையில் ஒரு பேட்டியில் ஏ.ஆர். முருகதாஸ் பேசும்போது, அஜித் கஜினி படத்தில் நடிக்க கமிட்டான போது படத்திற்கு மிரட்டல் என பெயர் வைத்தோம்.

அஜித் விலகிய பிறகு அந்த படத்திற்கு கஜினி என பெயர் வைக்கப்பட்டது. மிரட்டல் படத்தில் அஜித் சார் 2 நாட்கள் நடித்தார், சஞ்சய் ராமசாமியாக நடித்த காட்சிகள் என்னிடம் இப்போதும் உள்ளது, அதனை இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும் என கூறியுள்ளார். 

இதோ மிரட்டல் பட போட்டோஸ்,

NO COMMENTS

Exit mobile version