தமிழ் சினிமாவில் ரசிகர்களால் சியான் என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் விக்ரம். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தனது உடலை வருத்திக்கொண்டு கதைக்கு என்ன தேவையோ, அதை செய்வார்.
அந்நியன், ஐ, தங்கலான் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
7 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
இதை தொடர்ந்து தற்போது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
சொத்து மதிப்பு
இன்று சியான் விக்ரமின் அவர்களின் 59வது பிறந்தநாள். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை விக்ரமிற்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ. 200 கோடி முதல் ரூ. 250 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது.
