Home சினிமா தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா

தென்னிந்திய சினிமாவின் பணக்கார நடிகர் நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு, எவ்வளவு தெரியுமா

0

66வது பிறந்தநாள்

அக்கினேனி நாகேஸ்வர ராவ்வின் மகனான நாகார்ஜுனா
தனது சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார். 1986ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த விக்ரம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அன்றில் இருந்து இன்று வரை பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். சமீபத்தில் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்ததாக இவருடைய 100வது திரைப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தை தமிழ் இயக்குநரான ரா. கார்த்திக் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நித்தம் ஒரு வானம் படத்தை இயக்கியுள்ளார்.

இன்று கிங் நாகார்ஜுனாவின் 66வது பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நாகார்ஜுனாவிற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Lokah: Chapter 1- Chandra திரை விமர்சனம்

சொத்து மதிப்பு

இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் நாகார்ஜுனாவின் மொத்த சொத்து மதிப்பு $410 மில்லியன். இந்திய மதிப்பில் ரூ. 3500 கோடிக்கும் மேல் இவருக்கு சொத்து மதிப்பு உள்ளது.

தென்னிந்திய அளவில் பணக்கார நடிகராக நாகார்ஜுனா
உள்ளார். மேலும் சல்மான் கான், ஹ்ரித்திக் ரோஷன், அமிதாப் பச்சனை விட இவருடைய சொத்து மதிப்பு அதிகமாகும் என தெரிவிக்கின்றனர். 

NO COMMENTS

Exit mobile version