Home சினிமா விஜய்யின் கோட் படத்தின் ப்ரீ புக்கிங்கில் முதல்நாள் ஓவர்சீஸ் கலெக்ஷன் மட்டும் எவ்வளவு தெரியுமா?

விஜய்யின் கோட் படத்தின் ப்ரீ புக்கிங்கில் முதல்நாள் ஓவர்சீஸ் கலெக்ஷன் மட்டும் எவ்வளவு தெரியுமா?

0

விஜய்யின் கோட்

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் படம் கோட் (Greatest Of All Time).

வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்திற்கான புரொமோஷன் வேலைகள் தொடங்கியுள்ளது.

கோட் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், மனோபாலா, வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஓவர்சீஸ் கலெக்ஷன்

விஜய்யின் கோட் திரைப்படம் அமெரிக்காவில் முன்பதிவு செய்யத் தொடங்கிய 2வது நாளில் 850 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து அடுத்த நாளில் 100 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை வரை 307 காட்சிகளுக்கு 6,600 டிக்கெட்டுகளை விற்று, மொத்தம் 172,468 அமெரிக்க டாலர்களை வசூலித்துள்ளதாம். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 1.43 கோடி என கூறப்படுகிறது.

விஜய்யின் கோட் படம் பிரீமியர் ஷோக்களில் இருந்து மட்டுமே குறைந்தபட்சம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

Source: https://cineulagam.com/article/actor-vijay-goat-overseas-pre-booking-collection-1724735876

NO COMMENTS

Exit mobile version