Home சினிமா சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திர நடிகை விலகல்… அவருக்கு பதில் இனி இவர்தான்

சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திர நடிகை விலகல்… அவருக்கு பதில் இனி இவர்தான்

0

சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே, சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்.

ஆனந்தி என்ற கிராமத்து பெண் குடும்பத்தின் கஷ்டத்தை போக்க சம்பாதிக்க சென்னை வருகிறார். வந்த நாள் முதல் பார்க்காத பிரச்சனை இல்லை, இதற்கு இடையில் அவருக்கு அன்பு என சக தொழிலாளியுடன் காதல் ஏற்பட அதிலும் பிரச்சனைகள் தான்.

ஆனந்தி இப்போது கர்ப்பமாக உள்ளார், அவரின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பது இன்னும் வெளியே வரவில்லை.

அதற்குள் மகேஷ், அன்பு-ஆனந்தி திருமணம் நடக்க வேண்டும் என பிளான் போட எப்படியோ திருமணமும் முடிந்துவிட்டது. ஆனால் சன் டிவியில் சீக்கிரமே முடிந்த ஒரு திருமண எபிசோட் என்றால் சிங்கப்பெண்ணே சீரியலாக தான் இருக்க முடியும்.

திடீரென வந்த போன் கால், பாண்டியை பளார் விட்ட சேரன்… அய்யனார் துணை பரபரப்பு எபிசோட்

விலகல்

பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து முக்கிய நாயகி விலகியுள்ளார்.

அவர் யார் என்றால் ஆனந்தியின் அக்காவாக, கோகிலா கதாபாத்திரத்தில் நடித்துவந்த நிவேதா ரவி தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் இனி கோகிலாவாக சிந்துஜா என்பவர் நடிக்க உள்ளாராம்.

NO COMMENTS

Exit mobile version