கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நேற்றுடன் (05) நிறைவடைந்துள்ளன.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள்
இதற்கமைய, கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதிக்குள் மதிப்பீட்டுப் பணிகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை பரீட்சையில் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், செய்முறைப் பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21
Source: https://tamilwin.com/article/advanced-level-examination-results-released-date-1788671699
