Home இலங்கை சமூகம் டிரான் அலஸுக்கு எதிராக சட்டத்தரணிகள் எடுத்துள்ள கடும் தீர்மானம்

டிரான் அலஸுக்கு எதிராக சட்டத்தரணிகள் எடுத்துள்ள கடும் தீர்மானம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பொதுச்சபையில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு எதிராக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை ஒழிப்பது பாவம் இல்லை என புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் ஆட்சேர்ப்பாளர்களிடம் அவர் கூறியதை கண்டித்தே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் போலி தங்கத்துடன் பெண் உட்பட மூவர் கைது

தென் மாகாணங்களில் குற்றச் செயல்

மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கான முதலாவது உந்துருளி (மோட்டார் சைக்கிள்) பிரிவின் விசேட பயிற்சி பெற்ற அதிகாரிகளின் அணிவகுப்பில் அமைச்சர் கடந்த வியாழன் அன்று பங்கேற்றார்.

இதன்போது கொலைகள், போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபடுபவர்களை ஒழிப்பது பாவம் அல்ல என்று அமைச்சர் அதிகாரிகளிடம் கூறினார்.

இந்தநிலையில் அமைச்சர் பதவி விலகாவிட்டால், பொது பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து அவரை நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக நவரத்ன கூறினார்.

ஜனாதிபதியும் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கப்படாவிட்டால் உள்ளூர் மற்றும் சர்வதேச சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததை அடுத்து அமைச்சரின் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ள நவரத்ன, கடந்த சில மாதங்களில் இலங்கை பொலிஸாரும் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.  

அமெரிக்க டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயருமென கணிப்பு: இன்று பதிவாகியுள்ள நிலவரம்

யாழ்ப்பாணத்தில் வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version