Home இலங்கை சமூகம் வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிப்பு! கால்நடை வளர்ப்பாளர்களின் பொறுப்பற்ற செயல்

வெள்ளத்தால் விவசாய நிலங்கள் பாதிப்பு! கால்நடை வளர்ப்பாளர்களின் பொறுப்பற்ற செயல்

0

அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல்களைத் தவிர எஞ்சி இருக்கின்ற வயல்களில் கால்நடை வளர்ப்பாளர்கள் மாடுகளை மேய்கின்ற செயற்பாடுகள் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

டித்வா புயல் தாக்கத்தின் பின்னர் சில வயல் நிலங்கள் பாதிப்புக்கு
உள்ளாகி இருந்தன. 

இந்தநிலையில், கிண்ணியாவில் எஞ்சி
இருக்கின்ற அந்த வயல்களை பாதுகாப்பதற்காக வயல் உரிமையாளர்களால் பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்ற நிலையிலே இந்த சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

உரிய சட்ட நடவடிக்கை

இதனால் பாரிய
நஷ்டங்களை எதிர்நோக்குவதாக கிண்ணியா கண்டல்காடு,தீனேரி பகுதிகளை சேர்ந்த
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, விவசாயிகளும் கமநல சேவைகள் அபிவிருத்தி
உத்தியோகத்தரும் கிண்ணியா நகர சபை தவிசாளர் எம்.எம்.மஹ்தியிடம் இன்று (16) முறைப்பாடு அளித்தனர்.

இதற்கு இணங்க உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் நஷ்ட ஈடுகளை
பெற்றுக் கொடுப்பதற்காகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியோடு பேச்சுவார்த்தை
நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என தவிசாளர்
தெரிவித்தார். 

NO COMMENTS

Exit mobile version