முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP

37 வருடங்களின் பின் EPDP இன் ஆதரவோ கூட்டோ இல்லாமல் ஊர்காவற்துறை பிரதேச சபையை தமிழ்த்தேசிய கட்சிகள் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, யாழ்.ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை
சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசா திருவுளச்சீட்டு முறையில் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு
செய்வதற்கான அமர்வு இன்று (20) காலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது. 

தெரிவு செய்வதற்கான அழைப்பு

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அகில
இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராசாவும், இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனும் முன்மொழியப்பட்டனர்.

37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP | Ahila Ilankai Thamil Congress Kayts Pradeshiya

அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம் அன்னராவுக்கு ஆதரவாக, அகில
இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய
கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என
மொத்தமாக 5 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அத்தோடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் யுகந்தனுக்கு
ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 5 உறுப்பினர்கள்
வாக்களித்தனர்.

பிரதித் தவிசாளர் தெரிவு

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது
நடுநிலையாக செயற்பட்டனர்.

37 வருட வரலாற்றில் ஊர்காவற்றுறையை இழந்தது EPDP | Ahila Ilankai Thamil Congress Kayts Pradeshiya

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை
சேர்ந்த
செபஸ்தியாம்பிள்ளை லெனின் றஞ்சித் ஏகமனதான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 உறுப்பினர்களை கொண்ட ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி
சார்பில் 4 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் தேசிய
மக்கள் சக்தி சார்பில் தலா 3 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி
சார்பில் 2 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி சார்பில் ஒரு
உறுப்பினரும் நடந்து முடிந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.

37 வருடங்களாக EPDP ஆட்சி அமைத்து வந்த நிலையில் தமிழ்த்தேசிய கட்சிகளின் கைகளில் ஊர்காவற்துறை பிரதேச சபை கிடைத்திருக்கிறதுள்ளமைஅ குறிப்பிடத் தக்கது. 

You may like this,

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.