உலகளாவிய பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானங்களை ரத்து செய்துள்ளன.
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் இவ்வாறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிறுவனங்கள்
ஸ்பெயின், போர்ச்சுகல், சிலி, கொலம்பியா, பிரேசில் மற்றும் டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
இந்தநிலையில், ஆறு விமான நிறுவனங்கள் காலவரையின்றி விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், துருக்கி ஏர்லைன்ஸ் இன்று நவம்பர் 24 ஆம் திகதி முதல் நவம்பர் 28 ஆம் திகதி வரை விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
