கார்த்திகை தீபம்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை என எல்லா நாளும் ஒளிபரப்பாகி வரும் தொடர் கார்த்திகை தீபம்.
தொடரில் கார்த்திக்-தீபாவிற்கு ஏற்கெனவே திருமணம் நடந்திருந்தாலும் அபிராமி உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தீபா தனது தாலியை கழட்டி வைத்து கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.
இப்போது அவர் நல்லபடியாக திரும்பி வந்ததால் மீண்டும் தீபா-கார்த்திக் இருவருக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.
ஆனால் கார்த்திக்கை திருமணம் செய்ய ஆசைப்பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்த ரம்யா திட்டம் போடுகிறாள்.
வெளியேறியது ஏன்
இந்த தொடரில் அருணின் மனைவி ஐஸ்வர்யாவாக நடித்துவந்த சுப ரேக்ஷா தொடரில் இருந்து திடீரென விலகிவிட்டார்.
ஏனென்றால் அவர் கன்னட படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதால் கார்த்திகை தீபம் தொடரில் இருந்து விலகிவிட்டதாக கூறியுள்ளார்.