நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித். இவர் இப்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
பல மாதங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் இடையில் இடைவேளை விடப்பட்டு இருந்தது. பின் சமீபத்தில் தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென படப்பிடிப்பை விட்டு அஜித் சென்னை திரும்பினார், விமான நிலைய வீடியோக்களும் வெளியாகி இருந்தது.
வைரல் போட்டோ
அவர் திடீரென சென்னை வந்ததற்கு காரணம் அவரது மனைவியும், நடிகையுமான ஷாலினி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
சன் டிவி மலர் சீரியலில் இருந்து வெளியேறியது குறித்து நடிகை ப்ரீத்தி போட்ட முதல் பதிவு… என்ன ஆனது?
அவருடன் இந்த நேரத்தில் இருக்க வேண்டும் என்று தான் திடீரென சென்னை வந்தாராம்.
தற்போது மருத்துவமனையில் அஜித்துடன் எடுத்த போட்டோவை ஷாலினியே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.