அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அதன் பிறகு திடீரென தள்ளிவைக்கப்படுவதாக லைகா நிறுவனம் அறிவித்துவிட்டது. அதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள்.
இந்நிலையில் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த அஜித்தின் மற்றொரு படமான குட் பேட் அக்லீ ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரிலீஸ் தேதி
வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து குட் பேட் அக்லீ படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
#GoodBadUgly arrives on April 10th❤️🙏🏻 @MythriOfficial @SureshChandraa pic.twitter.com/K6N1x7uANT
— Adhik Ravichandran (@Adhikravi) January 6, 2025