Home இலங்கை சமூகம் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் கிளிநொச்சிக்கு விஜயம்

0

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா ( Akio ISOMATA) இன்றைய தினம் (11) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, கலோரெஸ் மனிதாபிமான கண்ணியகற்றும் செயற்பாடுகளை முகமாலைப்பகுதிக்கு சென்று
பார்வையிட்டுள்ளார்.

கள விஜயம்

ஜப்பானிய நிதி பங்களிப்புடன் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில், குறித்த பணியின் முன்னேற்றங்கள் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு
பார்வையிட்டதுடன், ஊழியர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியா இயக்மட்டா வடக்கு மாகாணத்திற்கான தனது
முதல் பயணத்தின்
போது, Humanitarian Development Organization (HDO) மற்றும் Nuffield School
for Deaf and
Blind ஆகிய இரண்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் “Grant Assistance for
Grassroots
Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குதற்கான
இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் முன்னிலையில்
யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் இந்த கைத்திடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளை
மேடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் இந்த திட்டங்களுக்காக 173,659 அமெரிக்க டொலர்கள் (சுமார் 50 மில்லியன் ரூபா ) ஒதுக்கியுள்ளது.

வசதியான கற்றல் சூழல்

வட மாகாணத்தில் செவிபுலனற்றொர் மற்றும் பார்வையற்றோருக்கான நஃபீல்ட் பாடசாலையை
மேம்படுத்துவதற்கான கருத்திட்டம்” சிறுவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான
கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கை முழுவதிலுமிருந்து
செவிபுலனற்ற மற்றும் பார்வையற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்றும் தங்குமிட
வசதிகளை வழங்கும் ஒரே தமிழ் மொழி நிறுவனமாக நஃபீல்ட் பாடசாலை திகழ்கின்றது.

இந்த திட்டம் பாடசாலையில் மின்சார விநியோகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும்
விடுதி வசதிகளை மேம்படுத்த உதவும்.

இலங்கையில், குறிப்பாக வட மாகாணத்தில், பாதிக்கப்பட்ட சமூகங்கள் நிலையான
வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கான ஜப்பானின் தூதுவர் இசோமாட்டா மீண்டும்
உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலதிக தகவல்: தீபன்

NO COMMENTS

Exit mobile version