Home இலங்கை கல்வி பாடசாலை நிகழ்வுகளில் நடைமுறைக்கு வரும் தடை: அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை

பாடசாலை நிகழ்வுகளில் நடைமுறைக்கு வரும் தடை: அரசாங்கம் வெளியிட்ட சுற்றறிக்கை

0

பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்விலும் மது மற்றும் போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் விளம்பரங்களுக்கு அரசாங்கம் முழுமையான தடை விதித்துள்ளது.

பாடசாலையின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் அதிகாரப்பூர்வ பாடசாலை நிகழ்வாகவே கருதப்பட்டு இத்தடைக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 உடனடியாக தடை 

இந்த விதியை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு ‘2026/10’ இலக்க சுற்றறிக்கை மூலம் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னணி பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளின் (‘பிக் மெட்ச்’) போது மாணவர்கள் மது மற்றும் போதைப்பொருட்களுக்கு பயன்படுத்துவதாக பெற்றோர் தெரிவித்த தொடர் முறைப்பாடுகளைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு இடையிலான முக்கிய கிரிக்கெட் போட்டிகள் உட்பட பாடசாலை தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் கல்வி அமைச்சினால் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது அதன் சின்னத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மஹேஸ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

Source: https://tamilwin.com/article/alcohol-to-be-banned-from-school-big-matches-1788659817

NO COMMENTS

Exit mobile version