Home இலங்கை கல்வி அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..

அகில இலங்கை ரீதியில் முதலிடம்: புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்.மாணவன் சாதனை..

0

புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில்
முதலிடத்தைப் பெற்று யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த மாணவன் சு. சபின்
சாதனை படைத்துள்ளார்.

யாழ். மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி
கற்று வரும் மாணவன் சு. சபின், புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப்
பெற்று தமிழ்மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அகில இலங்கை முதலிடம் 

மாணவனின் இந்தச் சிறப்பான சாதனை, அவரது குடும்பத்தினருக்கும் பாடசாலை
சமூகத்திற்கும் மட்டுமன்றி, யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக
கல்விச் சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

2026ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று(2) வெளியானமை குறிப்பிடத்தக்கது. 

Source: https://tamilwin.com/article/all-island-first-place-in-tamil-medium-scholarship-1788373122

NO COMMENTS

Exit mobile version