பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் நடைபெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு காவல்துறையினர் ஆதரவு வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை பச்சிளைப்பள்ளி பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் முன்வைத்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச சபை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பச்சிளைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அண்மை காலங்களில் சட்ட
விரோதமான மணல் அகழ்வு அதிகம் இடம் பெற்று வருகின்றன.
இவ் பிரதேசத்தில்
மட்டுமன்றி வடக்கில் பல பிரதேசங்களில் மணல் அகழ்வு நடவடிக்கைகள் மிகவும்
மோசமாக நடைபெருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் உள்ள காவல்துறைமா அதிபருக்கு கடிதம் ஒன்று
எழுதப்பட்டுள்ளதுடன் அதில் பச்சிளைப்பள்ளி காவல்துறையினர் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்பாடுகள்
ஏனெனில் நாளுக்கு நாள் சட்ட விரோதமான செயற்பாடுகள் அதிகரித்து செல்வதுடன் இதனை கட்டுப்படுத்துவதற்கு விசேட ஏற்பாடு ஒன்று
செய்யப்படவேண்டும்.
இருப்பினும், காவல்துறை மா அதிபர் இதற்கான எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
அத்தோடு, பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் சட்டவிரோதமான மணல் அகழ்வு
செயற்பாடு மட்டுமின்றி இன்னொரு புறம் இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும்
செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.
அவ் போதைப்பொருள் வியாபார நடவடிக்கைகளில்
ஈடுபடுபவர்களுடன் பளை காவல்துறையினர் நல்ல உறவு முறையில் உள்ளனர்.
சட்டவிரோதமான செயற்பாடு
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் இருந்து வரும் போதைப்பொருட்களை கை மாற்றும்
இடமாக பச்சிளைப்பள்ளி பிரதேசம் காணப்படுவதுடன் எதிர் காலத்தில் இதனை
கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் தமது சட்ட விரோத கும்பலுடன் இருக்கும் உறவு
முறையினை தவிர்த்து இவ் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு சிறந்த நடவடிக்கைகளை எடுக்கும் பட்சத்தில் போதையற்ற நாட்டினை கட்டி எழுப்ப முடியும்.
அண்மை காலங்களில் மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள், காவல்துறையினர்
நடவடிக்கைகளினால் மணலை ஏற்றிக்கொண்டு செல்லும் போது வீதி ஓரங்களில் மணல்களை
கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால் பாரியளவு விபத்துக்கள் ஏற்படும்
வாய்ப்புகள் உள்ளதுடன், இந்த விடயத்தை காவல்துறையினர் எதிர் காலத்தில் மிக
பொருப்போடு முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது பிரதேச சபை
மற்றும் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கும் போது தாம் மக்களுக்கான பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
