Home சினிமா 25 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. லாபம் மட்டும் இத்தனை கோடியா

25 நாட்களில் அமரன் படம் செய்துள்ள வசூல்.. லாபம் மட்டும் இத்தனை கோடியா

0

அமரன்

கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த அமரன், இந்த ஆண்டு அதிக வசூல் செய்த டாப் 3 திரைப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து இருந்தது. மேலும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சாய் பல்லவி இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

வசூல் விவரம்

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து உயிநீத்த, மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் படம், வெளிவந்த முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

அதை தொடர்ந்து 10 நாட்களில் ரூ. 200 கோடியும், 20 நாட்களில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில், 25 நாட்களை கடந்துள்ள அமரன் படம், இதுவரை உலகளவில் ரூ. 314 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 85 கோடிக்கும் மேல் லாபம் வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். 

Source: https://cineulagam.com/article/amaran-movie-box-office-collection-and-profit-1732519790

NO COMMENTS

Exit mobile version