Home சினிமா அமரன் நூறு நாள்.. நான் சினிமாவுக்கு வந்ததே அவரால் தான்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

அமரன் நூறு நாள்.. நான் சினிமாவுக்கு வந்ததே அவரால் தான்: இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

0

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படம் கடந்த வருடம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகி இருந்தது. 300 கோடிக்கும் மேல் வசூலித்து பெரிய ஹிட் ஆனது படம்.

இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

நீங்க தான் காரணம்

“அமரன் 100 நாள் தொட போகிறது.. மணி சார், நான் சினிமா பற்றி கனவு காண நீங்க தான் காரணம். முதலில் உங்களை தான் சந்தித்து போட்டோ எடுக்க வேண்டும் என நான் விரும்பினேன், 2005ல் அதை எடுக்கவும் செய்தேன். ஆனால் அது தொலைந்துவிட்டது.”

“இரண்டு தசாப்தங்கள் மற்றும் இரண்டு படங்களுக்கு பிறகு இது மீண்டும் நடந்து இருக்கிறது” என குறிப்பிட்டு அவர் நன்றி கூறி இருக்கிறார். 

NO COMMENTS

Exit mobile version