Home இலங்கை ஈரான் உடனான தொடர்பு: அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை

ஈரான் உடனான தொடர்பு: அமெரிக்கா விடுத்த பகிரங்க எச்சரிக்கை

0

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி தனது 3 நாள் பாகிஸ்தானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (24) இலங்கை வந்தடைந்ததை அடுத்து அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதிபர் இப்ராஹிம் ரைசியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது, ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 10 பில்லியன் டொலர்களாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்து வைத்த ஈரான் அதிபர்

ஐந்து ஒப்பந்தங்கள்

இந்நிலையில், இன்றையதினம்(24) அதிபர் இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.

அத்தோடு, இந்த விஜயத்தின் போது இலங்கை மற்றும் ஈரான் ஐந்து ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள ஈரான் அதிபரின் பாதுகாவலர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version