முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்! ஆயுதக்குழுக்களை எச்சரிக்கும் அமெரிக்கா

அமெரிக்க இராணுவ நிலைகள் மீது இனியும் ஈரான் ஆதரவுப் படையினர் தாக்குதல்களை நடத்தினால் அதற்கு உடனடியாக தக்க பதிலடி வழங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

சிரியாவிலும், ஈராக்கிலும் இருக்கும் ஈரான் ஆதரவுப் படையிரும், யேமனின் ஹவுதி கிளா்ச்சியாளா்களும் அமெரிக்க இராணுவ நிலைகளில் தாக்குதல் நடத்துவற்கான வாய்ப்பு இருப்பதனால் அத்தகைய தாக்குதல்களுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க தளபதிகள் தங்களைத் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் உத்தரவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு அமெரிக்க இராணுவ நிலைகளில் சுமாா் 160 முறை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

சிறீதரன் எம்.பி மீதான தாக்குதல்: ஒருபோதும் அனுமதிக்க முடியாது - சுகாஷ் கண்டனம்

சிறீதரன் எம்.பி மீதான தாக்குதல்: ஒருபோதும் அனுமதிக்க முடியாது – சுகாஷ் கண்டனம்

கடுமையான தாக்குதல்

போரில் ஹமாஸுக்கு தங்களது ஆதரவைத் தெரிவிக்கும் முகமாகவே ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் இஸ்ரேலுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைகளைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்! ஆயுதக்குழுக்களை எச்சரிக்கும் அமெரிக்கா | America Warns To Iran Support Groups For Attack

இதனால், தங்கள் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினா் மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடந்த வாரத்தில் நிகழ்த்தப்பட்டதைப் போல் அவா்கள் மீது மிகக் கடுமையான பதிலடித் தாக்குதல் நிகழ்த்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்! வெளியானது சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்! வெளியானது சுற்றறிக்கை

துரிதமாகக் கிடைக்கும்

எங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு தாக்குதலையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்கிறோம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மீண்டும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்! ஆயுதக்குழுக்களை எச்சரிக்கும் அமெரிக்கா | America Warns To Iran Support Groups For Attack

எனவே, தனது ஆதரவுப் படையைக் கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்த ஈரான் சிந்தித்தால், அதற்கும் கடுமையான பதிலடி மிகத் துரிதமாகக் கிடைக்கும் என்பதை அந்த நாடு புரிந்துகொள்ளவேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

யாழில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

யாழில் 14 மாதங்கள் நிரம்பிய குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்