Home உலகம் யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா

யுனெஸ்கோவில் இருந்து விலகிய அமெரிக்கா

0

யுனெஸ்கோவின் (UNESCO) உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா (United States) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த அறிவிப்பை அமெரிக்கா இன்று (21) வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும் கல்வி முகவரகம், இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நலன்

யுனெஸ்கோவின் தொடர்ச்சியான ஈடுபாடு அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2017 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பிலிருந்து விலகுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும், பின்னர் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜோ பைடன், அந்த உறுப்புரிமையை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தது.

NO COMMENTS

Exit mobile version