Home இலங்கை சமூகம் அதிவேக நெடுஞ்சாலைக்குள் திடீரென நுழைந்த யானையால் பரபரப்பு

அதிவேக நெடுஞ்சாலைக்குள் திடீரென நுழைந்த யானையால் பரபரப்பு

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஹம்பாந்தோட்டை-மத்தள பகுதியிலிருந்து வந்த காட்டு யானையை விரட்ட வீதி அபிவிரத்தி அதிகார சபை ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் யானை அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து, ஹம்பாந்தோட்டை சாலையில் 1.9 கிலோமீட்டர் தூணுக்கு அருகிலுள்ள மின் வேலியை சேதப்படுத்தி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் பயணித்தது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் துரித நடவடிக்கை

யானை ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்ததைக் கவனித்தவுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் யானையைச் சுட்டு விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.இதனையடுத்து யானை மத்தள நுழைவாயிலில் இருந்து வெளியேறி ஓடியது.

அந்த நேரத்தில் மத்தள நுழைவாயிலில் இருந்து அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து வெளியேறும் வாகனங்களைத் தடுக்கவும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

NO COMMENTS

Exit mobile version