Home இலங்கை அரசியல் எல்பிட்டிய சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

எல்பிட்டிய சபைத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

0

காலி மாவட்டம் (Galle) – எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இம்மாதம்14 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு

தகுதிபெற்ற தபால்மூல வாக்காளர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வாக்களிக்க முடியும் என்பதுடன், குறித்த திகதியில் தமது தபால் மூல வாக்கை அளிக்க முடியாவிடின் எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல் அலுவலகத்தில் வாக்கை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டதால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் வெகுவிரைவாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் பணிகள் கடந்த முதலாம் திகதி (01.10.2024) ஆரம்பமானது. 

வாக்காளர் பட்டியல்

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version