Home இலங்கை சமூகம் இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

0

இலங்கை மின்சார சபை, 20 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் கூரை சூரிய மின்சக்திஅமைப்புகளுக்கான புதிய நிலையான கட்டணங்களை அறிவித்துள்ளது.

இதன்படி 0-5 kWஇற்கு இடையிலான அமைப்புகள் ஒரு அலகுக்கு 20.90 ரூபாயை என்ற
அதிகபட்ச கட்டணமாக பெறவுள்ளன.

இதைத் தொடர்ந்து 5–20 kW அமைப்புகள், அலகு ஒன்றுக்கு 19.61 ரூபாய் கட்டணம்
கிடைக்கும்.

சூரிய மின்கலங்களை நிறுவ

இந்த நிலையில், அமைப்பின் அளவு அதிகரிக்கும் போது, ​​கட்டணம் குறைகிறது.
எடுத்துக்காட்டாக, 20–100 kW அமைப்புகள், அலகு ஒன்றுக்கு 17.46 ரூபாயை பெறும்,

அதேநேரம், 100–500 kW அமைப்புகள் 15.49 ரூபாயை பெறும்.

500–1,000 kW மற்றும் அதற்கு மேற்பட்ட 1,000 kW இலிருந்து பெரிய அமைப்புகள்
முறையே 15.07 ரூபாய் மற்றும் 14.46 ரூபாய்களை பெறும் என்று அறிவிக்கப்படுள்ளது.

இந்த புதிய கொள்கை, அதிகமான வீட்டு உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகங்கள்
சூரிய மின்கலங்களை நிறுவவும், நாட்டின் எரிசக்தி இலக்குகளுக்கு பங்களிப்பதை
ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version