Home இலங்கை பொருளாதாரம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

0

155,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த ஏல விற்பனை எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பெறுமதியான திறைசேரி உண்டியல்

இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 55 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.    

Source: https://tamilwin.com/article/announcement-of-the-central-bank-of-sri-lanka-1722739226

NO COMMENTS

Exit mobile version