Home இலங்கை சமூகம் துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு யானை பலி!

துப்பாக்கிச் சூட்டில் மற்றுமொரு யானை பலி!

0

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் உள்ள தம்புள்ளை- கந்தலம பகுதியில்
சிகிச்சை பெற்று வந்த ‘கந்தலம ஹெடகராய’ என்று அழைக்கப்படும் காட்டு யானை
உயிரிழந்ததாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இந்த யானையின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு
அறிவிக்கப்பட்ட பின்னர், 2025 மார்ச் 30, முதல் கால்நடை மருத்துவப்
பராமரிப்பில் இருந்து வந்தது.

சட்டவிரோத நடவடிக்கை

துப்பாக்கிச் சூடுகள் என்ற சந்தேகிக்கப்பட்ட காயங்கள் அதன் முன்காலில்
கண்டறியப்பட்டன.

மனித-யானை மோதலின் விளைவாக யானை பல சந்தர்ப்பங்களில் சுடப்பட்டுள்ளமையும்
தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இரத்த சோகை மற்றும் கடுமையான சிறுநீரக சேதங்கள் காரணமாக யானை
உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மின்சாரம் தாக்குதல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்
தொடர்பில் முறையிடுவதன் மூலம் காட்டு யானைகளைப் பாதுகாக்க உதவுமாறு,
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version