Home இலங்கை சமூகம் பிரபல பாடசாலை தரம் 5 மாணவனின் மோசமான செயல்.. அம்பலப்படுத்திய ஜனாதிபதி!

பிரபல பாடசாலை தரம் 5 மாணவனின் மோசமான செயல்.. அம்பலப்படுத்திய ஜனாதிபதி!

0

ஒரு பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவன் தனது புத்தகப் பையில் போதைப்பொருளை எடுத்துச் செல்வதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேலியகொடையில் உள்ள வித்யலங்கார மகா பிரிவேனாவில் நடைபெற்ற விழாவில் நேற்று (02.11.2025) கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

தரம் 5 மாணவன் பைக்குள் போதைப்பொருளை எடுத்துச்செல்வதை சக மாணவர்கள் அவதானித்து அது தொடர்பில் வெளியே கூறியுள்ளனர்.

குழந்தை மூலம் போதைப்பொருள் விற்பனை

இதனையடுத்து, குழந்தையின் பையில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த குழந்தையின் தந்தை போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய் உயிருடன் இல்லாததால் குழந்தை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version