ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதையில் செல்வதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ரணிலின் பாதையில் செல்வதற்கு அனுரகுமார திசாநாயக்க விரல்களை எண்ணிக் கொண்டிருக்கின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதான கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சி
அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி திருடர்களை பிடிப்போம் என்ற பிரதான கோஷத்துடன் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர்களது கொள்கைகள் என்ன என்பது குறித்து மக்கள் தீவிரமாக யோசனை செய்ய வேண்டும் என வசந்த முதலிலேயே குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் போராட்ட இயக்கத்தின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது வசந்த முதலிகே இந்த விடயத்தை கூறியுள்ளார்.
காலி முகத்திடல் அரகலய போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த முதலிகே, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.