முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் அரசுக்கு அனுரவின் கட்சி ஆதரவளிக்கும்: நம்பிக்கை வெளியிட்ட எம்பி

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி,  தற்போதைய ரணில் அரசுடன் இணைந்து செயற்படும் எனத் தாம் எதிர்ப்பார்ப்பதாக  ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அனுரகுமாரவின் இந்திய விஜயம்
வரவேற்கத்தக்கது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி, உலகத் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவது நல்ல
விடயமாகும்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ரணிலிடம் ஒப்படைத்தால்.. வஜிர அபேவர்தன பெருமிதம்

பன்னிரெண்டு வருடங்களுக்கு நாட்டை ரணிலிடம் ஒப்படைத்தால்.. வஜிர அபேவர்தன பெருமிதம்

ஆதரவு

நாட்டின் கொள்கைகளை உருவாக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி தமது பங்களிப்பை
வழங்கும்.

இது புதிய விடயம் ஒன்றல்ல, கடந்த காலத்திலும் தேசிய மக்கள் சக்தியான ஜே.வி.பி.
மறைந்த முன்னாள் அதிபர் ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் முன்னாள் அதிபர்களான
சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசுடன் இணைந்து
பணியாற்றியுள்ளது.

ரணில் அரசுக்கு அனுரவின் கட்சி ஆதரவளிக்கும்: நம்பிக்கை வெளியிட்ட எம்பி | Anura Kumara Work With The Current Ranil Gov

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசுக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியுள்ளது, அந்தவகையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுக்கும்
ஜே.வி.பியின் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின்
உறுப்பினர்கள் அங்கு பல தரப்பினரையும் சந்தித்ததுடன் பல நிறுவனங்களின்
செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!! பொதுமக்கள் அந்தரிப்பு!

பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!! பொதுமக்கள் அந்தரிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்