Home இலங்கை குற்றம் சர்ச்சையில் சிக்கும் அநுர தரப்பு உறுப்பினர்கள்! ரவுடித்தனம் உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் சிக்கிய நபர்கள்

சர்ச்சையில் சிக்கும் அநுர தரப்பு உறுப்பினர்கள்! ரவுடித்தனம் உட்பட பல குற்றச்சாட்டுகளுடன் சிக்கிய நபர்கள்

0

எப்பாவல – தெகல்ல பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 20 கிராம் ஹெராயினுடன், அந்தப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையின் அதிபர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, எப்பாவல பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, ​​இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிபரின் மனைவி பேலியகொட உள்ளூராட்சி சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.


போதைப்பொருள் கடத்தல்

இந்த சந்தேக நபர்கள் 54 மற்றும் 22 வயதுடையவர்கள், அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஹிங்குராக்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குராக்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது சகோதரனை விடுவிக்கக் கோரி, ஹிங்குராக்கொட பொலிஸ் நிலைய பொலிஸாரை அச்சுறுத்தி தனது பலத்தைப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்குராக்கொடயின் யட்டியல்பத்தன பகுதியைச் சேர்ந்த உறுப்பினர், நேற்று மதியம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஊழியர்களை அச்சுறுத்தி

மின் கட்டணம் செலுத்தாததால், உறுப்பினரின் சகோதரரின் வீட்டில் மின்சாரம் துண்டிக்க வந்த இரண்டு மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்தி தடுத்ததாகவும், அதிகாரிகள் வந்த மோட்டார் சைக்கிளை தாக்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினரின் சகோதரர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்சார சபை ஊழியர்கள் இருவரும் இது தொடர்பாக பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தனது சகோதரனை சந்திக்க பொலிஸ் நிலையத்திற்கு வந்து அவரை விடுவிக்கக் கோரிய பின்னர், வற்புறுத்தல் சம்பவத்திற்காக உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version