தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொரலஸ்கமுவ நகரசபை உறுப்பினர் லலானா பிரியதர்ஷனியின் கைப்பையை முச்சக்கர வண்டி சாரதியொருவர் திருடிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன்தினம் (08) அவர் முச்சக்கர வண்டியில் செல்லும் போது திருடிச்சென்றுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல மதிப்புமிக்க ஆவணங்கள்
சம்பவம் குறித்து தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது கைப்பையில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஜோடி தங்க காதணிகள், ரூ.35,000/= மதிப்புள்ள ஒரு மொபைல் போன் மற்றும் ரூ.15,000 பணம் மற்றும் பல மதிப்புமிக்க ஆவணங்கள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
